Welcome to the Official website of Tamil Nadu Prison                      Prisoners are Wards of the State, not Slaves - Mahatma Gandhi.
     Home |  Contacts |  Links |  Become Reformation Partner  

Flash News

கா.து.கூ.இயக்குநருக்கு காலி இடங்களை மதிப்பீடு செய்ய அதிகாரம்:

தமிழ் நாடு அரசு அரசாணை எண் 502 உள்துறை (சிறைத்துறை-2) தேதி:04.07.2012 மூலம் சிறைத்துறையில் தோன்றும் காலியிடங்களை மதிப்பீ்டு செய்து தேர்வு நடத்தும் பொருட்டு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு நேரடியாகவே தெரிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாணை காலியிடங்களைப் பூர்த்தி செய்வதில் நடைமுறை சார்ந்த காலதாமதத்தைத் தவிர்க்க உதவும். இவ்வாணை பணியாளர்களைத் தேர்வு செய்ய ஒரு வருடாந்திர கால அட்டவணையை நியமிக்கிறது. தேர்வுக்கான நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி தொடங்கும். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்வு செய்யப்படும் தேர்வாளர்களுக்குப் பயிற்சி ஆரம்பிக்கும்.;

சிறைத்துறையில் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்பதை இவ்வாணை உறுதிப்படுத்தும்.

Power to assess the estimate of vacancies delegated to ADGP:
Government of Tamil Nadu have issued a Government Order GO(Ms) No 502 Home (Prison-II) Department dated 04.07.2012 authorising the ADGP, Prisons, to assess the vacancies and intimate the number directly to the Uniformed Services Recruitment Board. This will enable the Department to cut short procedural delays in filling up vacancies. The Department will now follow an annual schedule of arriving at vacancies and filling them up. The process will start by the 15th of January every year with the assessment of vacancies and will end on the 1st January of the succeeding year when the training for the selected candidates will start.

This GO will help maintain a steady stream of new recruits and ensure that the Department does not have to suffer for want of personnel.


மா. தீ. சி. பகுதி செயல்பாடுகளில் உதவ முன்வந்தவர்கள்:

சென்னைக்கு அருகாமையிலுள்ள புழல்-2 சிறைச்சாலையில் சமீபத்தில் மாநில அளவிளான தீவிர சீர்திருத்த பகுதி ஒன்று அமைக்கப்பட்டது. இப்பகுதியில் வன்செயலில் ஈடுபடுவர்களுக்கும், தற்கொலை முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் தீவிர சீர்திருத்தப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் அடிப்படை தத்துவம் ;என்னவென்றால் ஒருவரின் சிந்தனைகளை நல்ல சிந்தனைகளாக மாற்ற அவரை நாள் முழுவதும் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுத்தவேண்டும். யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற சீர்திருத்த பணிகள் சிறிது நேரம் மட்டுமே ஒருவரின் மனத்தை மாற்றுகின்றன. மீதமுள்ள நேரம் அவர் மனதில் மீண்டும் கெட்ட எண்ணங்கள் நுழைய வாய்ப்பு தொடருகிறது. ஆகவே முழு நேரத்தையும் ஆக்கப்பூர்வமான காரியங்களால்; நிரப்புவதன் மூலம் மோசமான எண்ணங்களுக்கு இடமே இல்லாமல் செய்வது அவசியம்.

போகப் போக இப்பயிற்சி அனைத்து சிறைவாசிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தீவிர சீர்திருத்த பயிற்சியில் உதவி செய்ய தன்னார்வாளர்கள் சேரலாம் என்ற எங்களது அழைப்பினை ஏற்ற .ஆர்த்தி மதுசூதன், .சுரேஷ், பிரசன்னா ஆகியோர் 06.07.2012 ம் தேதியன்று காவல்துறை கூடுதல் இயக்குநரைச் சந்தித்தார்கள். திரு .சுரேஷ் சிறைவாசிகளுக்கு கொத்தனார் வேலை கற்றுக்கொடுக்க முன்வந்துள்ளார்.

Voluntary Agencies begin to respond to the needs of the SIRB:
A State-level Intensive Reformation Block was recently started in Puzhal-2 prison near Chennai. The SIRB focuses on intensive reformation efforts of a selected number of prison inmates who are either aggressive or are prone to suicidal tendencies. The SIRB works on the principle that you can change a person's personality by keeping him or her busy in some constructive activity or the other for the whole day. Although such reformation efforts as Yoga, meditation, vocational work etc. have been a part of prison reform programs, these programs help to occupy the mind of the inmate for a part of the day. Therefore, his or her mind remains open to resurgence of negative ideas during the window of vacant period that still remains available. SIRB focuses on filling up the entire time with useful and constructive tasks. As things progress, the effort will be extended to a larger number of inmates.

Meanwhile, SIRB makes it necessary to take the help others in organising useful training programs. An invitation to well-meaning individuals and organisation which can offer help was given at the end on an article on IRP and IRB.

Ms.AartiMadhusudhan met the ADGP, Prison Department, on 06.07.2012 along with Suresh Krishn and S. Prasanna and offered to help. Suresh offered to teach masonry work to the inmates which will make them suitable for taking up jobs in building construction.

Additional Director General of Police (Prisons)
Tamil Nadu Prison Department
Chennai Metropolitan Development Authority Tower II
No-1, Gandhi Irwin Road, Egmore, Chennai-600 008.

Phone: 91-44-28521512 ,
              91-44-28521306
Fax: 91-44-28585942
E-Mail: tnprison@gmail.com
         

Home |  About us |  Organization Setup |  History |  Reformation |  Probation Branch |  Amenities |  Prison Industry |  Recruitment |  Gallery |  Statistics |  Contacts |  Links |  FAQs |  Site Map |  Disclaimer
Information provided by:
Prison Department , Government of Tamil Nadu
Web Master : JJeyaraj
Hosted by: National Informatics Centre
This Page last updated on: April 8, 2014
Site optimized for 1024 x 768 monitor resolution